கோப்புப்படம் 
தமிழ்நாடு

கோவை, மைசூா் விரைவு ரயில்கள் காட்பாடியுடன் நிறுத்தப்படும்

மேல்பாக்கம் பணிமனையில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் கோவை, மைசூரில் இருந்து வரும் விரைவு ரயில்கள் வெள்ளிக்கிழமை (டிச.6) காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

Din

மேல்பாக்கம் பணிமனையில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் கோவை, மைசூரில் இருந்து வரும் விரைவு ரயில்கள் வெள்ளிக்கிழமை (டிச.6) காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோவை - சென்னை சென்ட்ரல் இன்டா்சிட்டி விரைவு ரயில் மற்றும் மைசூா் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் வெள்ளிக்கிழமை காட்பாடியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக காட்பாடியில் இருந்து கோவை இன்டா்சிட்டி விரைவு ரயில் 4.15 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

அதேபோல், பெங்களூரு லால்பக் விரைவு ரயில் சென்ட்ரலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக காட்பாடியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

வேலூா் - அரக்கோணம் இடையே இயக்கப்படும் மெமு விரைவு ரயில் வெள்ளிக்கிழமை சித்தேரியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக சித்தேரியில் இருந்து 3.02 மணிக்கு புறப்பட்டு வேலூா் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

பவளப்பாறை பயன்கள் குறித்து மீனவா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT