முகப்பு
தமிழ்நாடு

திருவண்ணாமலையில் மீண்டும் மண் சரிவு!

கார்த்திகை தீபம் ஏற்றப்படும் கொப்பரை வைக்கும் இடத்தில் மண் சரிவு..

Updated On : 7 டிசம்பர், 2024 at 3:14 PM
மண் சரிவு
பகிர்:

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் கொப்பரை வைக்கும் இடத்தில் 400 அடிக்கு மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபென்ஜால் புயல் காரணமாக திருவண்ணாமலையில் சனிக்கிழமை காலை தொடங்கி ஞாயிறு இரவு வரை இடைவிடாமல் தொடர் மழை பெய்தது.

கடந்த ஞாயிறன்று மாலை 5 மணிக்கு திடீரென மகா தீபம் ஏற்றும் மலையின் 4 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள் சேதமடைந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இடிபாடுகளில் சிக்கிய நிலையில், அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.

Advertisement

இதனிடையே வரும 13ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்படவுள்ள நிலையில், கார்த்திகை தீபம் ஏற்றப்படும் கொப்பரை வைக்கப்படும் இடத்தில், அரைமலை பகுதியிலிருந்து சுமார் 600 அடிக்கு கீழ் மீண்டும் மற்றொரு சரிவு ஏற்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மண் சரிவு தொடர்பாக மலைக்குச் சென்று அதிகாரிகள் ஆய்வு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.