நாகை மாவட்டத்துக்கு நாளை(டிச.12) உள்ளூர் விடுமுறை!
நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(டிச.12) விடுமுறை!
நாகூர் சந்தனக்கூடு ஊர்வலத்தை முன்னிட்டு நாகை மாவட்டத்துக்கு நாளை(டிச.12) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நிகழாண்டு கந்தூரி விழா கடந்த டிச. 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி வியாழக்கிழமை (டிச. 12) அதிகாலை நடைபெற உள்ளது.
வெள்ளிக்கிழமை (டிச.13) மாலை கடற்கரைக்கு பீா் ஏகுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. டிச.15-ஆம் தேதி இரவு புனித கொடியிறக்கத்துடன் கந்தூரி விழா நிறைவு பெறுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.