முதல்வர் ஸ்டாலின்-அமைச்சர் துரைமுருகன். 
தமிழ்நாடு

ஃபென்ஜால் புயல் பாதிப்பு: திமுக சார்பில் ரூ.1.30 கோடி நிதி

ஃபென்ஜால் நிவாரணப் பணிகளுக்கு துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஒருமாத ஊதியத்தை வழங்கினர்.

DIN

ஃபென்ஜால் நிவாரணப் பணிகளுக்கு துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஒருமாத ஊதியத்தை வழங்கினர். ரூ.1.30 கோடிக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அமைச்சர் துரைமுருகன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் ஃபென்ஜால் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம். கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின், தங்களது சட்டமன்ற உறுப்பினருக்கான ஒரு மாத ஊதியத்தை ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 5.12.2024 அன்று தலைமைச் செயலகத்தில், அரசு தலைமைச் செயலாளர் நா.முருகானந்தமிடம் வழங்கினார்.

அப்பா பேச்சைக் கேட்காத பிள்ளை! முதல்வரை விமர்சித்த ஹெச். ராஜா!

மேலும், திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.

அதன்படி, துணை முதல்வர், அமைச்சர் பெருமக்கள், சட்டப்பேரவை துணைத் தலைவர், அரசு தலைமைக் கொறடா, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோரின் ஒரு மாத ஊதியமான 1 கோடியே 30 இலட்சத்து 19 ஆயிரத்து 750 ரூபாய்க்கான வங்கி வரைவோலைகள்/காசோலைகளை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்றையதினம் முதல்வரிடம் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, அரசு தலைமைக் கொறடா கா. ராமச்சந்திரன் உடனிருந்தார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்த தங்கம் விலை!

ஆடுஜீவிதம் எதனால் தேசிய விருது பெறவில்லை? ரசிகர்கள் ஆதங்கம்!

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்

வெளிச்சப் பூவே... வாமிகா கேபி!

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

SCROLL FOR NEXT