காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி 
தமிழ்நாடு

அடுத்த 48 மணி நேரத்தில்.. புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

வங்கக்கடலில் ஏற்கெனவே நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வவலுவிழந்தது.

DIN

வங்கக் கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகிறது. இதனால் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தமிழ்நாடு நோக்கி நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடலோரப் பகுதியையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருந்தது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து, தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது.

இந்த நிலையில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களின் ஒருசில இடங்களில் அதி கனமழைக்கும், மற்ற இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.

ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், திருச்சி, கரூா், திருப்பூா், கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

ஊழல் என்பது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து: லோக் ஆயுக்த உறுப்பினா் வீ.ராமராஜ்

10 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா்கள் கைது

பள்ளி மாணவா் கொலை வழக்கு: சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சிறை

ராயல் கோ் மருத்துவமனைக்கு விருது

SCROLL FOR NEXT