மோப்ப நாய் 
தமிழ்நாடு

கடத்திவரப்பட்ட உயர்ரக கஞ்சா: காட்டிக்கொடுத்த மோப்ப நாய்!

சென்னை விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட உயர்ரக கஞ்சாவைக் காட்டிக்கொடுத்த மோப்ப நாய்!

DIN

தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.7.6 கோடி மதிப்புடைய 7.6 கிலோ உயர்ரக கஞ்சா போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

பயணிகளை மோப்ப நாய் உதவியோடு காவல்துறையினர் சோதனை செய்துகொண்டிருந்த போது கஞ்சாவை மறைத்து வைத்திருந்த பெட்டியைப் பார்த்ததும் அங்கேயே அமர்ந்துகொண்டு தரையை தோண்டுவது போல செய்து காவல்துறையினருக்குக் காட்டிக்கொடுத்தது.

உடனடியாக பெட்டியை திறந்து, போதை பொருளை கண்டுபிடித்து பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், கடத்தி வந்த பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாய்லாந்து நாட்டு தலைநகர்‌ பாங்காக்கில் இருந்து, சென்னை வரும் தனியார் பயணிகள் விமானத்தில், பெருமளவு போதைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை அடுத்து விமான நிலைய சுங்க அதிகாரிகள், நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்தில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதோடு போதை பொருளை கண்டுபிடிப்பதற்கான, நிபுணத்துவம் வாய்ந்த மோப்ப நாயையும், இந்த சோதனைக்கு பயன்படுத்தினர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பாங்காக்கில் இருந்து, சென்னை வந்த தனியார் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சுங்கத்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் கண்காணித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர், தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா பயணியாக போய்விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்தார். அவர் கொண்டு வந்த அட்டைப் பெட்டிகளை, மோப்பம் பிடித்த சுங்கத்துறை மோப்பநாய், உடனடியாக அதே இடத்தில் தரையில் அமர்ந்து கொண்டு, கால்களால் தரைய கீறி சைகை காட்டியது.

சுங்க அதிகாரிகள் அட்டைப்பெட்டிகளை திறந்துப்பார்த்து சோதனை செய்தனர். அதில், பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா போதைப் பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். அட்டைப் பெட்டிகளில் 7.6 கிலோ உயர் ரக கஞ்சா போதைப் பொருள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 7.6 கோடி. இதை அடுத்து போதைப் பொருள் கடத்திய பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்து, போதைப் பொருளையும் பறிமுதல் செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தல்!

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!

ஈரான் அதிபர் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

SCROLL FOR NEXT