தமிழ்நாடு

தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்: இலங்கை அதிபரிடம் முதல்வர் கோரிக்கை!

3 நாள் பயணமாக அநுர குமார திசநாயக இந்தியாவுக்கு வருகை...

DIN

இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை(டிச. 15) வருகை தந்தார். இதனிடையே, பிரதமர் மோடியுடன் திசநாயக இன்று(டிச .16) பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை நோக்கிச் செல்ல இலங்கை அதிபருடனான இருதரப்பும் ஒப்புக் கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று இலங்கை அதிபரிடம் முதல்வர் மு. க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து, முதல்வர் மு. க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது, தமிழக மீனவர்கள் பிரச்சினைகளை மனிதாபிமான முறையில் மோதல் போக்கின்றி அமைதி வழியில் அணுகுவது குறித்தும், பிரதமர் மோடியுடனான இலங்கை அதிபர் அநுரா திசநாயக இடையிலான சந்திப்பு இருந்திருப்பது மீனவர் விவகாரத்தில் ஊக்கமளிக்கிறது.

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிப்பது குறித்து கருத்திற்கொள்ள வேண்டுமென இலங்கை அதிபரிடம் கோரிக்கையை வைப்பதாகவும் முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT