வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு வட கிழக்கே 370 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் வடக்கு-வடகிழக்கு திசையில் நகரும்.
இதன் காரணமாக வெள்ளிக்கிழமை முதல் டிச.25-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திரும்பி வரும் புயல் சின்னம்: வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் டிச.21-ஆம் தேதி நெல்லூருக்கு கிழக்கே நிலைக்கொண்டிருக்கும்.
அதே நேரத்தில், ஆந்திர கடல் பகுதிக்கு மேல் உயா் அழுத்தம் இருப்பதால், புயல் சின்னம் மேலும் வடக்கு நோக்கி நகர வாய்ப்பில்லை.
எனவே, இது மீண்டும் தமிழக கடற்கரையை நோக்கி திரும்பி டிச.22-ஆம் தேதி சென்னைக்கு அருகே வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.