தாம்பரம் - பெருங்களத்தூர் பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் சனிக்கிழமை காலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாலாறு பாலப் பகுதியில் லாரி ஒன்று பழுதாகி நின்றதால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும், 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நின்றிருந்ததாகவும், லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தி சில மணி நேரங்களுக்குப் பிறகே போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாகவே காலை மற்றும் மாலையிலும், வார இறுதி, தொடக்க நாள்களிலும் பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்தான்.
தற்போது பாலாறு அருகே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால், அவ்வப்போது கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், சனிக்கிழமை சாலை முதலே, வாகனங்கள் சாலையில் மெல்ல ஊர்ந்து சென்றுவந்த நிலையில், 11 மணிக்குப் பிறகு கடும் நெரிசலாக மாறியது.
தாம்பரம் - பெருங்களத்தூர் சாலையில் இன்று காலை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாலாறு பாலத்தைக் கடக்க வாகன ஓட்டிகளுக்கு பல மணி நேரம் ஆனது. வாகனங்கள் அசையாமல் ஒரே இடத்தில் வெகு நேரம் நின்றிருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
சாலைகளும் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.