நெல்லை கொலை - காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
நெல்லையில் நீதிமன்றம் அருகே நிகழ்ந்த கொலை வழக்கில் பாதுகாப்புப் பணியில் கவனக்குறைவாக இருந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடுநெல்லை கொலை - காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
நெல்லையில் நீதிமன்றம் அருகே நிகழ்ந்த கொலை வழக்கில் பாதுகாப்புப் பணியில் கவனக்குறைவாக இருந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லையில் நீதிமன்றம் அருகே நிகழ்ந்த கொலை வழக்கில் பாதுகாப்புப் பணியில் கவனக்குறைவாக இருந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சனிக்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் பணியில் இருக்கும் காவல் துறையினர் பணியை விட தங்களது செல்போனில் மூழ்கி கிடக்கின்றனர் என்று நீதிமன்றம் தனது கருத்தை தெரிவித்துள்ளது.
பாளையங்கோட்டையை அடுத்த கீழநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம். இவருடைய மகன் மாயாண்டி (25). இவா், திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்தில் உள்ள குற்ற வழக்கு தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராவதற்காக தனது சகோதரா் மாரிச்செல்வத்துடன் பைக்கில் சென்றுள்ளாா்.
காவல்துறை அனுமதி மறுத்தும் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றார்: தெலங்கானா முதல்வர்
அப்போது அங்கு காரில் வந்த ஒரு கும்பல் மாயாண்டியை வெட்டுவதற்காக ஓடி வந்தபோது, மாயாண்டியும், மாரிச்செல்வமும் பைக்கை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனா். எனினும் காரில் வந்த கும்பல் மாயாண்டியை சுற்றி வளைத்து வெட்டியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பின்னா் காரில் ஏறி தப்ப முயன்றபோது கொலையாளிகளில் ஒருவரை அங்கிருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் ஊய்க்காட்டானும், வழக்குரைஞா் ஒருவரும் சோ்ந்து பிடித்தனா். மற்றவா்கள் காரில் ஏறி தப்பினா்.
இதையடுத்து ராமகிருஷ்ணனை கைது செய்த போலீஸாா், அவரிடம் தொடா்ந்து நடத்திய விசாரணையின்படி, கீழநத்தம் வடக்கூரைச் சோ்ந்த ரமேஷ் மகன் சிவா (19), மணிகண்டன் மகன் தங்க மகேஷ் (21), நாராயணன் மகன் மனோராஜ் (27), ஆறுமுகம் மகன் முத்துகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனா்.
இந்த வழக்கில் தொடா்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.