முகப்பு
தமிழ்நாடு

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் கடலில் 2 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

Updated On : 21 டிசம்பர், 2024 at 4:34 AM
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலால் கரைக்கு வந்த காயமடைந்த மீனவர்கள்
பகிர்:

வேதாரண்யம்: நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் கடலில் 2 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அக்கரைப்பேட்டை, பெருமாள் பேட்டை பகுதியை சார்ந்த மீனவர்கள் இரண்டு படகுகளில் வழக்கம்போல மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

மீனவர்கள் கோடியக்கரை அப்பால் வெள்ளிக்கிழமை இரவு மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, இரண்டு படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் படுகாயம் அடைந்த மீனவர்கள் ராஜேந்திரன், ராஜ்குமார்.

மேலும் மீனவர்களின் மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பொருள்களை அவர்கள் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.

இதனால் படுகாயம் அடைந்த மீனவர்கள் ராஜேந்திரன், ராஜ்குமார் ஆகியோர் சனிக்கிழமை காலை கரையேறி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.