மு.க. ஸ்டாலின் 
தமிழ்நாடு

வலிமையுடன் உள்ளது திமுக; 2026-ல் வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்

திமுக வலிமையுடன் இருப்பதாகவும், 2026ஆம் ஆண்டு திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

DIN

திமுக வலிமையுடன் இருப்பதாகவும், 2026ஆம் ஆண்டு திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் இன்று (டிச. 22) நடைபெற்றது.

இதில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,

''திமுக கூட்டணி குறித்து எதிர்க்கட்சிகள் தப்புக்கணக்கு போடுகின்றன; திமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி. பலரும் போடுகிற அரசியல் கணக்கு எல்லாம் விரைவில் தப்புக்கணக்கு ஆகும்.

ஓயாமல் உழைக்கும் நமக்கு, உற்சாகம் தருவது தொடர் வெற்றிகள்தான். தமிழகத்தை பின்னுக்குத்தள்ள வேண்டும் என்று பாஜக நெருக்கடி தருகிறது.

எவ்வளவு நெருக்கடியில் ஆட்சிக்கு வந்தாலும் அதனைக் கடந்து தமிழகத்தை முன்னேற்றிக்கொண்டிருக்கிறோம்.

இந்தியாவில் எந்த மாநில அரசும் இந்த அளவுக்கு திட்டங்களை நிறைவேற்றவில்லை. ஒருநாள் முழுக்க பட்டியல் போடும் அளவுக்கு திட்டங்கள் உள்ளன.

திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து மக்கள் நலத் திட்டங்களை செய்து வருகிறோம். பதவிகளுக்காக கொள்கைகளில் சமரசம் செய்யாமல் ஆட்சிக்கு வந்துள்ளோம்.

களப்பணிகளுக்கு தொண்டர்களை தயார்படுத்த வேண்டிய பணி, செயற்குழு உறுப்பினர்களுடையது.

75 ஆண்டுகள் கடந்தும் திமுக வலிமையோடு இருக்கிறது, 2026-ல் வெல்லப் போவது திமுக கூட்டணிதான்'' எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT