நடுவழியில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில் Din
தமிழ்நாடு

திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: ரயில்கள் தாமதம்!

திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது பற்றி...

DIN

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு, அதிர்வுகள் கேட்டதால் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது.

சென்னை எழும்பூரிலிருந்து புதுச்சேரி நோக்கி பயணிகளுடன் திங்கள்கிழமை காலை புறப்பட்ட பயணிகள் ரயில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ள ஒங்கூர் பகுதிக்கு வந்த போது, திடீரென கடுமையான அதிர்வு ஏற்படுவதை உணர்ந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். தொடர்ந்து கீழே இறங்கிச்சென்று ரயில் தண்டவாளத்தை பார்த்தார்.

அப்போது ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரயில் ஓட்டுநர், இது தொடர்பான தகவலை உடனடியாக திண்டிவனம் ரயில் நிலையத்திலுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, ரயில்வே பொறியாளர்களும், ரயில்வே ஊழியர்களும், நிகழ்விடம் விரைந்து சென்று தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டதால் அவ்வழியாக சென்ற மற்ற ரயில்களும் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் சரி செய்யப்பட்ட பிறகு, சுமார் ஒரு மணி நேரம் காலதாமதமாக புதுச்சேரி நோக்கி ரயில் புறப்பட்டுச் சென்றது.

இதனால் அவ்வழியாக செல்லவிருந்த திருச்செந்தூர் விரைவு ரயில், குருவாயூர் விரைவு ரயில் உள்ளிட்ட பல்வேறு விரைவு ரயில்கள் சென்று சேர்வதில் இன்று சுமார் ஒரு மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலை கண்டறிந்து சரியான நேரத்தில் ரயிலை நிறுத்திய ரயில் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT