வாஜ்பாயுடன் முன்னாள் முதல்வர் கருணாநிதி. 
தமிழ்நாடு

மதச்சார்பின்மையைக் காத்தவர் வாஜ்பாய்: முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழாரம்!

நாட்டின் மதச்சார்பின்மையை பேணிக் காத்தவர் வாஜ்பாய் என முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

DIN

நாட்டின் மதச்சார்பின்மையை பேணிக் காத்தவர் வாஜ்பாய் என முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

மறைந்த முன்னாள் முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 100-ஆவது பிறந்தநாள் இன்று(டிச. 25) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அமைச்சர்கள் என பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவுகூர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

'முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நூறாவது பிறந்தநாளில் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பினையும், முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் அவர் கொண்டிருந்த நட்புறவினையும் நினைவுகூர்கிறோம்.

வலதுசாரிக் கருத்தியல் கொண்டவராக இருந்தாலும், பிரதமர் பொறுப்பில் இருந்தபோது நாட்டின் மதச்சார்பின்மைப் பண்பை பேணிக் காத்தார். அவரது வாழ்வும் பணியும் நிலைத்து நிற்கும்!' என்று பதிவிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி, வாஜ்பாயுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT