அமைச்சர் ரகுபதி கோப்புப்படம்
தமிழ்நாடு

மாணவி பாலியல் வழக்கில் கைதானவர் திமுகவைச் சேர்ந்தவர் அல்ல: அமைச்சர் விளக்கம்!

அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பு...

DIN

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் திமுகவைச் சேர்ந்தவர் அல்ல என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

'சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தகவலறிந்து 5 -6 மணி நேரத்தில் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.

இந்த வழக்கை மறைக்க வேண்டிய அவசியம் திமுக அரசுக்கு இல்லை. கைதான ஞானசேகரன் திமுகவின் அடிப்படை உறுப்பினர்கூட இல்லை, ஆனால், அவர் திமுகவைச் சேர்ந்தவர் என்றும் மாணவரணி துணை அமைப்பாளர் என்றும் பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

அவர் துணை முதல்வர் உதயநிதியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள். அவர் நடந்துவரும்போது அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. யாரேனும் வரும்போது புகைப்படம் எடுப்பதையோ செல்ஃபி எடுப்பபதையோ தடுக்க முடியாது. அமைச்சர்களையும் மக்கள் சந்திப்பது இயல்புதான். இதை யாரும் தடுக்க முடியாது. எனவே ஞானசேகரனுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நிச்சயமாக அவருக்கு தண்டனை பெற்றுத் தரப்படும்.

இது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் போன்று அல்ல. அதில் அன்றைக்கு முக்கிய பிரமுகரின் மகன் ஒருவரே ஈடுபட்டிருந்தார். அதனை மறைக்க ஆட்சியாளர்கள் முயற்சித்தனர். எதிர்க்கட்சிகளின் போராட்டத்தின் விளைவாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் அதனை மூடிமறைக்க பார்த்தார்கள். ஆனால் இந்த சம்பவத்தை வெளிப்படையாக விசாரித்து வருகின்றோம்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... எஸ்பிஐ வங்கியில் 5,180 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

யமுனை ஆற்றில் உயரும் நீர்மட்டம்! தண்ணீரில் மூழ்கிய குடியிருப்புப் பகுதிகள்! | Uttarakhand

800-க்கும் அதிகமான காட்சிகள்... மறுவெளியீடானது கேப்டன் பிரபாகரன்!

4வது நாளாகக் குறைந்த தங்கம் விலை!

டிரம்ப் வரி! இனியும் மௌனமா? இந்தியாவின் பக்கம் நிற்பதாக சீனா அறிவிப்பு

SCROLL FOR NEXT