Center-Center-Chennai
தமிழ்நாடு

எச். ராஜாவின் சிறைத்தண்டனை நிறுத்திவைப்பு!

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த ஓராண்டு சிறைத்தண்டனை நிறுத்திவைப்பு.

DIN

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த ஓராண்டு சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

பெரியார் சிலை உடைப்பு, அறநிலைத்துறை அதிகாரிகளின் குடும்பத்தினரை அவதூறாகப் பேசியது, திமுக எம்.பி. கனிமொழி குறித்து அவதூறாகப் பேசியது உள்பட 11 வழக்குகள் எச்.ராஜா மீது பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எச்.ராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் டிச. 2ல் நடைபெற்றது.

இதில் பெரியார் சிலை உடைப்பு மற்றும் கனிமொழி குறித்து அவதூறாகப் பதிவிட்ட இரு வழக்குகளில் தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேல்முறையீடு செய்ய அவகாசம் அளித்து சிறைத் தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி அறிவித்தார்.

இதையடுத்து மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், எச்.ராஜாவுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த தலா 6 மாத சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறியுள்ளது.

மேல்முறையீட்டு வழக்கு முடியும் வரை தண்டனையை நிறுத்திவைப்பதாக நீதிபதி விக்டோரியா கெளரி கூறி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

SCROLL FOR NEXT