விஜய் / சீமான் (கோப்புப் படங்கள்) 
தமிழ்நாடு

விஜய் கட்சியில் திராவிடம் என்ற சொல் இல்லாததே மகிழ்ச்சி: சீமான்

நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதிய அரசியல் கட்சியில் திராவிடம் என்ற சொல் இல்லாததே மகிழ்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

DIN


நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதிய அரசியல் கட்சியில் திராவிடம் என்ற சொல் இல்லாததே மகிழ்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்துள்ளார். இதன்மூலம் தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் நடிகர் விஜய்யின் இந்த செயல் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். 

அந்தவகையில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது குறித்து பேசிய சீமான், விஜய் தொடங்கியுள்ள கட்சியின் தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் நன்றாக உள்ளது. இதை வரவேற்கிறேன். புதிதாக தொடங்கும் கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என பல பெயர்களைக் கொண்டு பரீசலித்துவந்தார். அதில் இந்த பெயரை தேர்வு செய்துள்ளார். விஜய் தொடங்கியுள்ள கட்சி பெயரில்,  திராவிடம் என்ற சொல் இல்லாததே பெரிய மகிழ்ச்சி தான். 

அரசியலில் அவருக்கான வாக்கு அவருக்கு, எனக்கான வாக்கு எனக்கு. அவர் தொடங்கிய கட்சியில் கழகம் என்று இருப்பது தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளுக்கு மட்டுமே ஒப்பந்தம் போட்டு கொடுக்கவில்லை. கழகம் என்பது ஓர் கூட்டமைப்பிற்கு கூறப்படும் சொல். கழகம் என்பதை யார் வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளலாம் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT