தமிழ்நாடு

அண்ணா நினைவிடத்தில் திமுகவினர் மரியாதை!

அண்ணா நினைவுநாளையொட்டி மெரினாவிலுள்ள நினைவிடத்தில் திமுகவினர் மலர் தூவி இன்று (பிப். 3) மரியாதை செலுத்தினர். 

DIN

அண்ணா நினைவுநாளையொட்டி மெரினாவிலுள்ள நினைவிடத்தில் திமுகவினர் மலர் தூவி இன்று (பிப். 3) மரியாதை செலுத்தினர். 

முன்னதாக திருவல்லிக்கேணி - வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து அண்ணா நினைவிடம் வரை திமுகவினர் அமைதிப்பேரணியில் ஈடுபட்டனர். 

அண்ணா நினைவுநாளையொட்டி திமுகவினர் அனைவரும் அமைதிப்பேரணி நடத்தி அறிஞர் அண்ணாவுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் சென்னையில் திமுக அமைதிப்பேரணி நடைபெற்றது. இந்த அமைதிப்பேரணியில் திமுக பொருளாளர் டி. ஆர். பாலு, கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

திருவல்லிக்கேணி - வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து அமைதிப்பேரணி புறப்பட்டு, அண்ணா நினைவிடத்தில் முடிந்தது.

அண்ணா நினைவுநாளையொட்டி அவரின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நினைவிடம் வரை நடைபெற்ற அமைதிப்பேரணிக்குப் பிறகு துரைமுருகன் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

அதனைத் தொடர்ந்து திமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் அண்ணா நினைவிடத்தில் அடுத்தடுத்து மரியாதை செலுத்தினர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT