தமிழ்நாடு

சரியத் தொடங்கிய மேட்டூர் அணை நீர்மட்டம்: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ள நிலையில், திறக்கப்படும் நீரின் அளவால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

DIN

காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்படாததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 97 கன அடியாக சரிந்துள்ளது.

இந்த நிலையில் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கும் குடிநீர் தேவைக்கும் வினாடிக்கு 6,600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைய தொடங்கியது.

நேற்று காலை 70.42 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 70.05 அடியாக குறைந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 0.37 அடி குறைந்துள்ளது.

தற்போது அணையின் நீர் இருப்பு 32.74 டிஎம்சியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சரிந்த கடும் வறட்சியான சூழலில், அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

தென்மேற்கு பருவமழை காலம் வரை மேட்டூர் அணை காவிரியில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த நிலை நீடித்தால் அடுத்த நீர்ப்பாசன ஆண்டில் குறித்த நாளில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பது கேள்விக்குறியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT