தமிழ்நாடு

அமலாக்கத்துறை எங்கள் கதவை தட்ட வேண்டிய அவசியம் இல்லை: அண்ணாமலைக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

DIN

அமலாக்கத்துறை எங்கள் கதவை தட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று அண்ணாமலைக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார். 

கே வி குப்பத்தில் நேற்று நடைபெற்ற என் மண், என் மக்கள் நடைப்பயணத்தின் போது பாஜக  மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமலாக்கத்துறை வேலூர் எம்பி கதிர் ஆனந்த் வீட்டின் கதவை விரைவில்  தட்டும் எனக் கூறியிருந்தார்.

இதுகுறித்து அமைச்சர் துரைமுருகனிடம் கேட்டபோது, அவர்கள் ஒன்றும் எங்கள் கதவை தட்ட வேண்டாம், அந்த கஷ்டம் அவர்களுக்கு எதற்கு நாங்களே திறந்து வைத்திருக்கிறோம்.

பொருளாதாரத்தில் தமிழகம் பின்தங்கி உள்ளதாக அண்ணாமலை கூறியது குறித்து கேட்டதற்கு அவர் என்ன வந்து பார்த்தாரா. பெரிய பெரிய வல்லுனர்களே எங்களுக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள் என்றார்.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்து எழும் வதந்திகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. பிறகு துரைமுருகன் சொன்னதாக எதையாவது ஒன்னு போட்டு குட்டையை கிளப்பி விடுவீர்கள். கூட்டணி குறித்து முறையாக அறிவிப்பு வரும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT