முகப்பு
தமிழ்நாடு

திருவண்ணாமலை செல்லும் வழியில் கார் விபத்து: தம்பதி பலி

புதுக்கோட்டை அருகே காரும் சரக்கு வாகனமும் மோதிய விபத்தில் தம்பதி பலியாகியுள்ளனர்.

Updated On : 9 பிப்ரவரி, 2024 at 1:41 PM
விபத்துக்குள்ளான கார்
பகிர்:

புதுக்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காரும், சரக்கு ஏற்றிவந்த ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் தம்பதி உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலத்தைச் சேர்ந்தவர் எஸ். கோவிந்தன் (60). இவரது மனைவி உமா மகேஸ்வரி (50). மகன் பிரவீன் சுந்தர். இவர்கள் 3 பேரும் திருச்சி வழியாக திருவண்ணாமலை நோக்கி ஆன்மிக சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். காரை மகன் பிரவீன் சுந்தர் ஓட்டியுள்ளார்.

புதுக்கோட்டை அருகே சத்தியமங்கலம் பகுதியில் சென்றபோது, காரும் எதிரே வந்த சரக்கு ஆட்டோவும் மோதிக்கொண்டன.

இதில், கோவிந்தன், உமா மகேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர். படுகாயம் அடைந்த பிரவீன் சுந்தர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த சத்தியமங்கலம், நெடுஞ்சேரியைச் சேர்ந்த எஸ்.கௌதம் (20) படுகாயம் அடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் குறித்து கணேஷ் நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →