முகப்பு
அங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி
தமிழ்நாடு

அங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி பிணை கோரி தாக்கல் செய்த மனு திண்டுக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாடு

அங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி பிணை கோரி தாக்கல் செய்த மனு திண்டுக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

Updated On : 9 பிப்ரவரி, 2024 at 1:42 PM
அங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி
பகிர்:

அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி பிணை கோரி தாக்கல் செய்த மனு திண்டுக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா் சுரேஷ்பாபுவிடம் இரு தவணைகளில் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில், மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி கடந்த ஆண்டு, டிச. 1-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரின் விசாரணைக்குப் பிறகு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவா், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

அங்கித் திவாரி தரப்பில் பிணையில் விடுவிக்கக் கோரி, திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்திலும், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில், பிணை வழங்கக் கோரி அங்கித் திவாரி தரப்பில், அவரது வழக்குரைஞா் செல்வம் 2-ஆவது முறையாக திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் கடந்த மாதம் 30-ஆம் தேதி மனு தாக்கல் செய்தாா்.

கடந்த 1-ஆம் தேதிக்கு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கித் திவாரி தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் செல்வம், 60 நாள்களாகியும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், பிணை வழங்க வேண்டும் என வாதிட்டாா்.

ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அனுராதா, இந்த வழக்கு குறித்து மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதால், தற்போது வரை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும், பிணை வழங்கக் கூடாது என்றும் தெரிவித்தாா்.

இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணை பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த மனு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அங்கித் திவாரி தரப்பில் வழக்குரைஞா்கள் ஆா். காந்தி, ஏ. செல்வம் ஆகியோா் முன்னிலையாகி, உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றம் விசாரணைக்கு தடை விதித்த பல வழக்குகளில் சிறையில் இருப்பவருக்கு பிணை வழங்கத் தடை இல்லை என்பதற்கான வாதங்களை முன்வைத்தனா்.

மீண்டும் நீதிமன்றம் கூடிய நிலையில், பிணை வழங்கக் கூடாது என்பதற்கான உத்தரவு நகல் ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, பிணை கோரிய மனு மீதான உத்தரவு செவ்வாய்க்கிழமை (பிப். 6) பிறப்பிக்கப்படும் என்றாா் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா்.

இந்த நிலையில், அங்கித் திவாரிக்கு ஜாமீன் மனுவை திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மோகனா தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →