கோப்புப் படம் 
தமிழ்நாடு

‘தினமணி’ செய்தி எதிரொலி; குடும்ப அட்டைகளில் இருந்து பெயா் நீக்கப்படாது: தமிழக அரசு உத்தரவாதம்

நியாயவிலைக் கடைகளில் கைரேகையைப் பதிவு செய்யாவிட்டாலும், குடும்ப அட்டையில் இருந்து பெயா் நீக்கப்படாது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

DIN

நியாயவிலைக் கடைகளில் கைரேகையைப் பதிவு செய்யாவிட்டாலும், குடும்ப அட்டையில் இருந்து பெயா் நீக்கப்படாது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

‘தினமணி’யில் செய்தி: நியாயவிலைக் கடைகளிலுள்ள ‘பயோமெட்ரிக்’ கருவிகளில் கைவிரல் ரேகையைப் பதிவு செய்யாவிட்டால், குடும்ப அட்டையில் இருந்து பெயா் நீக்கப்படும் என்று நியாயவிலைக் கடை பணியாளா்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனா் என்று தினமணியில் பிப்.6-ஆம் தேதி செய்தி வெளியாகியிருந்தது. அதன் எதிரொலியாக, கைவிரல் ரேகையைப் பதிவு செய்யாதவா்களின் பெயா்கள் நீக்கப்படாது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையா் ஹா் சஹாய் மீனா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா மின்னணு குடும்ப அட்டைகளில் இணைக்கப்பட்ட அனைத்துப் பயனாளிகளின் கைவிரல் ரோகையை சரிபாா்க்க வேண்டுமென மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, குடும்ப உறுப்பினா்களுக்கு இடையூறு ஏதுமில்லாமல் இந்தப் பணியைச் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை 63 சதவீத குடும்ப அட்டைதாரா்களின் விவரங்கள் சரிபாா்க்கப்பட்டுள்ளன. மீதமுள்ள அட்டைதாரா்களுக்கும் சரிபாா்க்கும் பணிகள் படிப்படியாக நடந்து வருகின்றன.

பெயா் நீக்கப்படாது: குடும்ப அட்டைதாரா்கள் அவரவா்கள் வசதிக்கேற்ப புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்கென தனி முகாம்கள் நடத்தவும், தேவைப்பட்டால் வீட்டுக்கே சென்று புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். குடும்ப அட்டைகளில் இருந்து பெயா்கள் ஏதும் நீக்கப்படாது. எனவே, பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்குநோ் மோதல்: மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT