தமிழ்நாடு

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரைப் பெருவிழா: பந்தல் கால் நிகழ்ச்சி

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரைப் பெருவிழாவுக்காகப் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூர் பெரியகோயிலில் ஆண்டு தோறும் சித்திரைப் பெருவிழா 15 நாள்களுக்கு நடைபெறுவது வழக்கம். 

நிகழாண்டு சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில், சித்திரைத் தேரோட்டம் ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழா ஏப்ரல் 23 ஆம் தேதி கொடி இறக்கத்துடன் நிறைவடைகிறது.

இதையொட்டி, பெரிய கோயில் வளாகத்தில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பந்தல் கால் நடப்பட்டது.

இதில், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கோ. கவிதா, கோயில் செயல் அலுவலர் ப. மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT