சென்னை கொளத்தூரில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
சென்னை கொரட்டூரில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை கொரட்டூரில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் வியாழக்கிழமை(பிப்.8) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை கொளத்தூரில் வசித்து வரும் குறும்பட இயக்குநர் முகில் சந்திரா என்பவரது வீட்டில் ஹைதராபாத்தை சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள் வியாழக்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
மாவோயிஸ்டுடன் தொடர்பு இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.