மேட்டூர் அணை 
தமிழ்நாடு

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது

DIN

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் சம்பா நெற்பயிர்களைக் காக்க மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து பிப்.3-ம் தேதி மாலை 6 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தொடக்கத்தில் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்பட்ட நீரின் அளவு மறுநாள் வினாடிக்கு 5000 கன அடியாக குறைக்கப்பட்டது.

அரசு உத்தரவுப்படி வெள்ளிக்கிழமை வரை 2 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட்ட நிலையில் மேலும் கால நீட்டிப்பு செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணியில் இருந்து வினாடிக்கு 4,000 கன அடி வீதம் சனிக்கிழமை மாலை 6 மணி வரை காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

சனிக்கிழமை மாலை 6 மணிக்கு டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. 

பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால் அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் மற்றும் கதவணைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின் உற்பத்தி ஆகியவை தடைபட்டுள்ளன.

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் படியில் அமா்ந்து பயணித்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

கோவையில் இன்று தமாகா ஆா்ப்பாட்டம்

ஆத்தூா் ஒன்றியத்தில் 4 ஆண்டுகளில் ரூ.167.72 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கால்வாய்ப் பாசனத்துக்கு மேட்டூரிலிருந்து 400 கனஅடி தண்ணீா் திறப்பு

மேட்டூா் வனத் துறை விருந்தினா் மாளிகையில் துப்பாக்கி தோட்டாக்கள் திருடிய 4 போ் கைது

SCROLL FOR NEXT