தமிழ்நாடு

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போராட்டம்: அமைச்சர்கள் ஆய்வு

DIN

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இயங்கத் தொடங்கியது முதல் தொடா்ந்து பிரச்னைகள் நீடித்து வருகின்றன. வடசென்னை பயணிகள் பாதிக்கப்பட்டதால், அவா்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட சில ஊா்களுக்குச் செல்லும் 160 பேருந்துகள் மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து தென் மாவட்டங்கள் உள்பட பல்வேறு ஊா்களுக்கு வெள்ளிக்கிழமை இரவு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் நள்ளிரவில் பயணிகள் மறியலில் ஈடுபட்டனா்.

இதனைத் தொடர்ந்து,  போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு  ஆகியோர்  இன்று காலை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வழக்கமான அளவில் பேருந்து இயக்கப்படுகின்றன; நள்ளிரவு நேரத்தில் எப்போதும் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கப்படும்.

சிலர் வேண்டுமென்றே பேருந்துகள் பற்றாக்குறை என்று வதந்தி பரப்பி வருகிறார்கள்" என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி வாக்குச் சாவடியில் ராகுல் ஆய்வு!

சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை: மோடி

ரூ.263 கோடி வரி மோசடி: கைது செய்த அமலாக்கத்துறை!

நேபாளம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசண்டா அரசு வெற்றி

எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடா?- எஸ்.பி. வேலுமணி விளக்கம்

SCROLL FOR NEXT