செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் பிப்.7 வரை நீட்டிப்பு 
தமிழ்நாடு

செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி

வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

DIN

வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

குற்றச்சாட்டுப் பதிவுக்காக செந்தில் பாலாஜியை நாளை ஆஜர்படுத்தவும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் 14-ஆம் தேதி கைது செய்தனா்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அவா் வைக்கப்பட்டுள்ளாா். ஏற்கெனவே, அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றமும், உயா் நீதிமன்றமும் நிராகரித்த நிலையில், 2-ஆவது முறையாக ஜாமீன் கோரி உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால், புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக செந்தில் பாலாஜி ஆஜா்படுத்தப்பட்டாா். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதன்மூலம் செந்தில் பாலாஜிக்கு 20-வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபோன் 17 - எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா? புது அம்சங்கள் என்னென்ன?

மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு கோரி நீடித்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவு!

காஸாவில் தொடரும் தாக்குதல்! 361 ஆக உயர்ந்த பட்டினிச் சாவு!

ஆப்பிள் ஐஃபோன் 17 அறிமுகம் எப்போது? இந்தியாவில் என்ன விலை?

நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! சரிவுடன் முடிந்த பங்குச் சந்தை!

SCROLL FOR NEXT