முருகேசன் 
தமிழ்நாடு

குமுளி: அரசு பேருந்து மோதி விவசாயி பலி

தேனி மாவட்டம் குமுளி மலைச்சாலையில் விவசாய தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி அரசுப் பேருந்து மோதி வெள்ளிக்கிழமை சம்பவ இடத்திலேயே பலியானார்.

DIN

கம்பம்: தேனி மாவட்டம் குமுளி மலைச்சாலையில் விவசாய தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி அரசுப் பேருந்து மோதி வெள்ளிக்கிழமை சம்பவ இடத்திலேயே பலியானார்.

கூடலூர் பாலசுப்பிரமணிய கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராசு மகன் முருகேசன் (65), இவருக்கு சொந்தமான ஏலக்காய் தோட்டம் கேரளம் மாநிலம் குமுளியை அடுத்த 4 ஆம் மைலில் உள்ளது. வழக்கம்போல் வெள்ளிக்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் ஏலக்காய் தோட்டத்திற்கு குமுளி மலைச்சாலையில் மாதா கோயிலுக்கு மேல் உள்ள வளைவில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குமுளி காவல் நிலைய போலீசார்,முருகேசன் சடலத்தை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தனர்.

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிராக ஜாா்க்கண்ட் பேரவை தீா்மானம்

நாளைய மின்தடை

‘செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்படும்’

மாநகராட்சி பள்ளிகளில் 1,747 தூய்மை பணியாளா்களை நியமிக்க முடிவு: மாமன்றக் கூட்டத்திலிருந்து கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் வெளிநடப்பு

நாளை 2 மின்சார ரயில்கள் ரத்து

SCROLL FOR NEXT