முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) வட வானிலை நிலவக்கூடும்.

Updated On : 18 பிப்ரவரி 2024, 1:40 am IST
பகிர்:

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) வட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தென்தமிழக கடலோரப் பகுதி, மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) சூறாவளிக்காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.