தமிழ்நாடு

மேட்டூர் அருகே இறந்துபோனவரின் சடலத்தை அடக்கம் செய்வதில் இரு தரப்பினர் மோதல்

Sasikumar

மேட்டூர் அருகே அருகே இறந்துபோனவரின் சடலத்தை அடக்கம் செய்வதில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு நிலவியது.

கடந்த மாதம் பாவாஜி சாஹிப் (101 வயது) என்பவர் இறந்தபோது ஒருதரப்பினர் அடக்கம் செய்ய வந்தனர். அதற்கு அந்தப் பகுதியில் வசிக்கும் இன்னொரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இரு தரப்பினரையும் சமரசப்படுத்தினர். பின்னர் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. இன்று சத்யா நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் ஒஜீர் (85) என்பவர் வயது மூப்பு காரணமாக பலியானார்.

அவரது சடலத்தை இன்று அடக்கம் செய்ய கொண்டு வந்தபோது இரு தரப்பினரிடைய மீண்டும் மோதல் ஏற்படும் அபாயம் நிலவியது. எனவே, மேட்டூர் காவல்துணை கண்காணிப்பாளர் மரியமுத்து வட்டாட்சியர் விஜி ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். சடலத்தை ஒரு தரப்பினர் சுமந்து வந்தனர். அப்போது அங்கிருந்த மற்றொரு தரப்பினர் தடுத்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் சாலையில் படுத்து மறித்தனர். ஆனால் சடலத்தை சுமந்து வந்தவர்கள் சற்று ஒதுங்கி சடலத்தை எடுத்து தங்களது மயானத்திற்கு கொண்டு சென்றனர். சடலத்தை அடக்கம் செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சடலத்தை மயானத்திலேயே வைத்துவிட்டு மற்றொரு தரப்பினர் கொளத்தூர் மைசூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கொளத்தூர் மைசூர் சாலையில் போக்குவரத்து தடைபட்டு உள்ளது. மேலும் இருதரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருடியவர் கைது!

ஞானவாபி, மதுராவில் கோயில் கட்டுவோம்: அஸ்ஸாம் முதல்வர் சர்ச்சை

அந்தமானில் சூர்யா - 44 படப்பிடிப்பு?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.280 உயர்வு

ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி

SCROLL FOR NEXT