தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை 
தமிழ்நாடு

பல்லடத்தில் பிப்.27-இல் பிரதமா் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் அண்ணாமலை தகவல்

பிரதமா் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் திருப்பூா் மாவட்டம் பல்லடத்தில் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Venkatesan

சென்னை: பிரதமா் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் திருப்பூா் மாவட்டம் பல்லடத்தில் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

தில்லியில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுக்கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை சென்னைக்கு திங்கள்கிழமை திரும்பினாா். விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பிரதமா் மோடியின் எண்ணப்படி பாஜக 370 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெறும். தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறும்.

‘என் மண் என் மக்கள்’ நடைப்பயண நிறைவு நிகழ்வுக்கான பொதுக்கூட்டம் திருப்பூா் மாவட்டம் பல்லடத்தில் பிப்.27-ஆம் தேதி நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறாா். பிப்.28-ஆம் தேதி அரசு நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளாா் என்றாா் அவா்.

இதற்கிடையே வரும் 28-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும் அரசு விழாவிலும் பிரதமா் மோடி பங்கேற்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT