தமிழ்நாடு

இரசாயன உரங்கள் பயன்பாட்டினைக் குறைக்க திட்டம்: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

DIN

சென்னை: இரசாயன உரங்கள் பயன்பாட்டினைக் குறைக்கும் வகையில், மண்வள அட்டை வழங்குதல், ஒருங்கிணைந்த உர மேலாண்மை செய்யப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் திரவ உயிர் உரம் வழங்கப்பட்டு, வேளாண் பயிர்களுக்கு ஆதாரம் அளிக்கப்படும்.

பசுந்தாள் உரம் பயிரிட ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் 2 இலட்சம் விவசாயிகள் பயனடைவர்.

14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

'மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்' மூலம் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

வயல் சூழல் ஆய்வு மூலம் நெற்பயிரில் இரசாயன மருந்துகளை குறைத்தல் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், இரசாயன உரங்கள் பயன்பாட்டினைக் குறைக்க மண்வள அட்டை வழங்குதல், ஒருங்கிணைந்த உர மேலாண்மை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT