தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும் 9 பேர்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணைக்காக, 9 பேரும் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

DIN

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 9 பேரும் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

கோவை மகளிர் நீதிமன்றத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹரோனிமஸ் பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட 8 பெண்கள் வாக்குமூலம் கொடுத்துள்ள நிலையில் கடத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த ஒரு வருடமாக வீடியோ கான்பிரன்ஸிங்கில் விசாரணைக்கு 9 பேரும் ஆஜராகி வந்த நிலையில் , ஒரு வருடத்திற்கு பின்பு இன்று 9 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்தப்பட இருக்கின்றனர்.

கடந்த 2021 ம் ஆண்டு சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் அதில் கூடுதல் ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்களின் நகல்கள் கேட்டு ஒன்பது பேரும் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

பனியும் சுடுகிறது... ஶ்ரீத்து கிருஷ்ணன்

SCROLL FOR NEXT