தமிழ்நாடு

பணிப் பெண் வழக்கு: திமுக எம்எல்ஏ மகன், மருமகளின் காவல் நீட்டிப்பு

DIN

வீட்டு பணிப் பெண்ணைத் துன்புறுத்தியதாக அளிக்கப்பட் புகாரில் கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் ஆகியோரின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வீட்டுப் பணிப் பெண்ணைத் துன்புறுத்தியதாக, பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மொ்லினா ஆகியோா் மீது நீலாங்கரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, டிச.25-ஆம் தேதி அவா்கள் இருவரையும் தனிப்படை போலீஸாா் ஆந்திரத்தில் கைது செய்தனா்.

பின்னா், புழல் சிறையில் அடைக்கப்பட்டனா். இதுதொடர்பான வழக்கு சென்னை மாவட்ட 3ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இருவரின் காவலை மார்ச் 7ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. புழல் சிறையில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களின் காவலை நீட்டித்து சென்னை மாவட்ட 3ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் கல்லூரியில் கோடை கால பயிற்சி

பெண் தற்கொலை

மழை எச்சரிக்கை: மதுரை அரசுப் பொருள்காட்சி ஒத்திவைப்பு

ராஜீவ் காந்தி நினைவு தின பேரணி

காமராஜா் பல்கலை. பேராசிரியா் மீது பாலியல் புகாா்

SCROLL FOR NEXT