மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை...
துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த தினமான இன்று...
அவர் என்மீது காட்டிய தனி அன்பும், பண்பும் என்றும் என் நினைவில்...இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 76-ஆவது பிறந்த நாள் இன்று (பிப். 24) தமிழக முழுவதும் கொண்டாடப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.