தமிழ்நாடு

விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலை விபத்து: இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் அரசு நிதி

விருதுநகா் மாவட்டத்தில் நடந்த தனியார் பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

DIN

சென்னை: விருதுநகா் மாவட்டத்தில் நடந்த தனியார் பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட செய்தியில்,

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சிந்தப்பள்ளி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் அருணாச்சலபுரம் கிராமத்தைச் சேர்ந்த அழகுமாரிச்சாமி மகன் அஜித்குமார் (21) என்ற இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்திற்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT