தமிழ்நாடு

விஜயதரணி பாஜகவில் இணைந்திருப்பது, இந்த தேசத்திற்கு செய்யும் மாபெரும் துரோகம்: ஜோதிமணி

ஜோதிமணி குற்றச்சாட்டு: விஜயதரணியின் பாஜக இணைப்பு தேச துரோகம்

DIN

விஜயதரணி பாஜகவில் இணைந்திருப்பது, இந்த தேசத்திற்கு செய்யும் மாபெரும் துரோகம் என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், தலைவர் ராகுல்காந்தி நாட்டைக் காக்க இறுதி யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ,விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்துவிலகி பாஜகவில் இணைந்திருப்பது ,இந்த தேசத்திற்கு செய்யும் மாபெரும் துரோகம்.

அரசியல் பெண்களுக்கு எப்போதும் போர்க்களம் தான். ஒவ்வொரு நாளும் நெருப்பாற்றை நீந்திதான் கடக்க வேண்டியிருக்கிறது. பெண்களின் உழைப்பும், திறமையும், செல்வாக்கும் அவ்வளவு எளிதாக அங்கீகரிக்கப்படுவதில்லை என்பது உண்மைதான்.

ஆனால் அதற்காக கொண்ட கொள்கையில் சமரசம் செய்துகொள்வதையும், நாம் இவ்வளவு காலம் எதிர்த்து நின்ற பாஜகவின் பாசறைக்குச் செல்வதையும் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி: தலைவர்கள் வாழ்த்து!

கிஸ் டிரெய்லர்!

நேபாளத்தில் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொலை!

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து!

தங்கத்தைப் போல் வரலாறு காணாத உச்சத்தை தொடும் வெள்ளி!

SCROLL FOR NEXT