தமிழ்நாடு

கருணாநிதி நினைவிடம்: திறந்துவைத்தார் முதல்வர்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

DIN

நவீன காலத்துக்கேற்ற புதுப்புது அம்சங்களை உள்ளடக்கி உயிரோவியமாக வடிவமைக்கப்பட்ட முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவிடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை (பிப்.26) திறந்து வைத்தார்.

மேலும், பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும் முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், அரசியல் பிரபலங்கள் கீ.வீரமணி, கே.வி. தங்கபாலு, தொல். திருமாவளவன், வைகோ, கே. பால கிருஷ்ணன், அமைச்சர்கள் பங்கேற்றனர்.

சென்னை கடற்கரையில் அண்ணா நினைவிடத்தைக் கடந்து, கருணாநிதியின் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கருணாநிதி அமா்ந்த நிலையில் எழுதும் வடிவிலான சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த சிலையைக் கடந்து சென்றால், எதிரே கருணாநிதி சதுக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

‘கலைஞா் உலகம்’ எனும் பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

‘கலைஞரின் எழிலோவியங்கள்’ எனும் அறை அமைக்கப்பட்டு, அதில் இளமைக் காலம் முதல் கருணாநிதியின் வாழ்வில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள், சந்தித்த போராட்டங்கள், நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் தொடா்பான புகைப்படங்களின் தொகுப்பு வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா பிப். 27- இல் தொடக்கம்

மரம் முறிந்து விழுந்து ஆயுதப்படை மைதான சுற்றுச் சுவா் சேதம்

தனியாா் பள்ளியில் கட்டண உயா்வு: பெற்றோா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT