தமிழ்நாடு

தமிழகத்தில் 39 தொகுதிகளை பாஜக வெல்லும்: அண்ணாமலை

தமிழகத்தில் 39 தொகுதிகளை பாஜக வெல்லும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

DIN

தமிழகத்தில் 39 தொகுதிகளை பாஜக வெல்லும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திவந்த 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையின் நிறைவு விழா பல்லடம் மாதப்பூரில் இன்று (பிப். 27) நடைபெற்று வருகிறது.

விழா மேடையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளார். அவருடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

மேடையில் பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு இருப்பதற்கு ஒரே காரணம் பிரதமர் நரேந்திர மோடிதான். இது யாத்திரையின் நிறைவு விழாவாக இருந்தாலும், செய்ய வேண்டிய செயல்கள் இன்னும் ஏராளம் உள்ளது.

அனைவரின் உழைப்பையும் ஒன்றிணைத்து தமிழகத்திலிருந்து 39 மக்களவை உறுப்பினர்களை அனுப்பிவைக்கும்வரை நமக்கு ஓய்வு இல்லை.

10 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி பார்க்கும்போது தமிழகத்திற்கான மாற்றம் பல்லடத்திலிருந்து தொடங்கியது என்று இருக்க வேண்டும்.

400 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று 3வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் நீடிப்பார்.

தமிழகம் முழுவதும் பிரதமர் நரேந்திர மோடியின் பெருமை பரவியுள்ளது. இந்தியா முழுவதும் பாஜக புகழ் பரவியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளை பாஜக வென்று ஆட்சியைப் பிடிக்க உதவும் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

தேவி தரிசனம்... பிரனலி ரத்தோட்!

சிவாஜிகணேசன் பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான விபத்து! சம்பவ இடத்தின் காட்சிகள்!

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 27 பேர் பலி!

SCROLL FOR NEXT