தமிழ்நாடு

பல்லடத்தில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

Manivannan.S

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாதப்பூரில் நடக்கும் பொதுக்கூட்ட மேடைக்குச் செல்லும் சாலையில் இருபுறமும் நின்று பிரதமர் மோடிக்கு மலர்களைத் தூவியும் கோஷங்களை எழுப்பியும் வரவேற்றனர்.

பொதுக்கூட்ட மேடையை நோக்கி திறந்தவெளி வாகனத்தில் நின்று கையசைத்தவாறு காரில் பிரதமர் மோடி சென்றார். அவருடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் வாகனத்தில் செல்கிறார்.

'என் மண் என் மக்கள்' பாத யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டன் மாதப்பூரில் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் கோவை மாவட்டம் சூலூர் விமான படை தளத்திற்கு வந்துசேர்ந்தார்.

சூலூரிலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு பல்லடம் வந்தார். அங்கிருந்து மாதப்பூரில் நடக்கும் 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வசதிக்கும் நம்பிக்கைக்கும் இடையே ஓரிடத்தில்... உஷாஸி ராய்!

கபில்தேவ் வரிசையில் இடம் பிடித்த ஏழைத் தச்சரின் மகள் அமன்ஜோத் கெளர்!

கனவைக் குடித்த மயக்கத்தில்... அயன்னா சாட்டர்ஜி!

ஏர் இந்தியா விபத்தில் உயிர்த் தப்பிய ரமேஷின் நிலை என்ன?

நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளி... ஸ்வேதா குமார்!

SCROLL FOR NEXT