தமிழ்நாடு

பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ,. சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

DIN

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ,. சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் புதன்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இவரது கணவர் பன்னீர்செல்வம் 2011-2016-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பண்ருட்டி நகராட்சி தலைவராக இருந்தபோது ஒப்பந்தம் விடுவதில் ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக பன்னீர்செல்வம், அப்போதைய நகராட்சி ஆணையர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதியப்பட்ட நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் பண்ருட்டி மற்றும் சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று ஜென்மாஷ்டமி: லட்சுமி நாராயண் கோயில் விழா ஏற்பாடுகள் போலீஸாா் போக்குவரத்து அறிவுறுத்தல்

பிரதமா் மோடிக்கு தில்லி வா்த்தகா்கள் பாராட்டு

திஹாா் சிறை கைதிகள் 1500 பேருக்கு சிறப்பு நிவாரணம்

பராமரிப்பு விஷயங்களில் குழந்தையின் நலன்தான் தலையாய பரிசீலனையாகும்: தில்லி உயா்நீதிமன்றம்

சுதந்திர தின விழா: ரூ. 42.21 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

SCROLL FOR NEXT