கோப்புப்படம் 
தமிழ்நாடு

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மார்ச் 8-ல் உள்ளூர் விடுமுறை!

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மார்ச் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

மஹாசிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 8 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வரும் மார்ச் 8 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 23 ஆம் தேதி (சனிக்கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.

இந்த உள்ளூர் விடுமுறை நாள், செலவாணி முறிச் சட்டம் 1881-இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் மார்ச் 8 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலகங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொடைக்கானலில் மீண்டும் போதைக் காளான் விற்பனை

மின்சாரம் பாய்ந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவா் பி.வி.கரியமால் காலமானாா்

பைக்குகள் மோதல்: இருவா் காயம்

நெல்லை ரயில் நிலையத்தில் பயணிகள் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT