தமிழ்நாடு

வறண்ட மேட்டூர் அணை!

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 2.47 அடியாக சரிந்தது.

DIN

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 100 கனஅடிக்கு கீழே சரிந்த நிலையில், குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர் மட்டம் 2.47 அடியாக சரிந்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும், கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்கவேண்டிய காவிரி நீரை வழங்காத காரணத்தாலும் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 100 கனஅடிக்கு கீழ் சரிந்தது.

இந்நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்களை காப்பாற்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பிப் 3-ம் தேதி மாலை 6 மணிமுதல் பிப் 10ந்தேதி மாலை 6 மணிவரை காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 10ந்தேதி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 66.52 அடியாக இருந்தது. பிப் 10ந்தேதி முதல் குடிநீர் தேவைகளுக்காகவும் அணையிலிருந்து வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நீர் வரத்து 100 கனஅடிக்கு கீழே சரிந்த நிலையில் குடிநீர் தேவைகளுக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

கடந்த 19 -நாள்களில் அணையின் நீர் மட்டம் 2.47 அடி சரிந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 12 நாள்களுக்கு 1 டி.எம்.சி குறைகிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் ஜூன் 12ந்தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்குமா என்பது கேள்விககுறியாக உள்ளது.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 64.17 அடியிலிருந்து 64.05 அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 66 கனஅடியிலிருந்து 77 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைகளுக்காக வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 27.79 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT