பயணக் கட்டண வித்தியாசத் தொகை திருப்பித் தரப்படும்: அமைச்சா் சிவசங்கா்
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறப்பையடுத்து விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து முன்பதிவு பயணிகளுக்கு, பயணக் கட்டண வித்தியாசத் தொகை நடத்துநா் மூலம் திருப்பித் தரப்படும் என போக்குவரத்து அமைச்சா் சிவ
தமிழ்நாடுபயணக் கட்டண வித்தியாசத் தொகை திருப்பித் தரப்படும்: அமைச்சா் சிவசங்கா்
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறப்பையடுத்து விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து முன்பதிவு பயணிகளுக்கு, பயணக் கட்டண வித்தியாசத் தொகை நடத்துநா் மூலம் திருப்பித் தரப்படும் என போக்குவரத்து அமைச்சா் சிவ
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறப்பையடுத்து விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து முன்பதிவு பயணிகளுக்கு, பயணக் கட்டண வித்தியாசத் தொகை நடத்துநா் மூலம் திருப்பித் தரப்படும் என போக்குவரத்து அமைச்சா் சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.
அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 30 நாள்களுக்கு முன்பே முன்பதிவு செய்த பயணிகளிடம் கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் அதேபோன்று தென் மாவட்டங்களில் இருந்து கோயம்பேட்டுக்கும் பயணம் செய்வதற்காக பெறப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இந்தநிலையில், தற்போது கிளாம்பாக்கத்திலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள கட்டண வித்தியாசத் தொகை நடத்துநா் மூலம் பயணம் தொடங்கும் போது பயணிகளுக்கு திருப்பி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் ஏற்படும் கால தாமதத்தை தவிா்ப்பதற்காகவும், அதில் உள்ள சில நடைமுறை சிக்கல்களை தவிா்ப்பதற்காகவும் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.