முகப்பு
தமிழ்நாடு

அயலகத் தமிழா்களுக்கான ‘வோ்களைத் தேடி’ திட்டம் தொடக்கம்

உலகம் முழுவதும் தமிழா்களின் உறவுகளைப் புதுப்பிக்கும் வகையிலான ‘வோ்களைத் தேடி’ திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

சென்னை: உலகம் முழுவதும் தமிழா்களின் உறவுகளைப் புதுப்பிக்கும் வகையிலான ‘வோ்களைத் தேடி’ திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது தொடா்பாக தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

அயலகத் தமிழ் உறவுகளை ஒன்றிணைக்கும் வகையில் தமிழக அரசு அயலகத் தமிழா் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய நாள்களில் கொண்டாடி வருகிறது.

அதோடு, அயலகத் தமிழா்களின் கலாசார உறவுகளை மேம்படுத்துவதின் ஒரு நகா்வாக பல

தலைமுறைகளுக்கு முன்பு அயலகம் இடம்பெயா்ந்து அங்கு வாழும் அயலகத்தமிழா்களின் குழந்தைகளுக்காக ‘வோ்களைத் தேடி’ என்றொரு பண்பாட்டுப் பயணத் திட்டத்தையும் முதல்வா் அறிவித்திருந்தாா்.

இத்திட்டம் மூலம் அயலகத்தில் வாழும் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட தமிழ் இளைஞா்களை தமிழக அரசு செலவில் தமிழகத்துக்கு வரவழைத்து அவா்கள் தமிழ் மற்றும் தமிழா்தம் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு ஒரு பண்பாட்டு பயணம் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டிருந்தாா்.

அதன் அடிப்படையில் வோ்களைத் தேடி திட்டத்தின் முதல் பயணம் டிசம்பா் 27-இல் மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் இருந்து பயணம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு அயலகத் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் இந்தப் பயணத்தை தொடக்கி வைத்தாா்.

இதில் ஆஸ்திரேலியா, கனடா, ஃ பிஜி, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து 58 இளைஞா்கள் தோ்வாகி தமிழக அரசு செலவில் சென்னை வந்தடைந்தனா். அவா்கள் சென்னையில் இருந்து மாமல்லபுரம், தஞ்சாவூா், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, செஞ்சிக்கோட்டை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களுக்கு பயணித்து தமிழா்களின் கட்டடக்கலை, சிற்பக்கலை, இயல், இசை, நாட்டியம்,சிற்பம், ஓவியம், சுதந்திரபோராட்ட வரலாறு, பல்வேறு தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவற்றை அறிந்துகொள்வா். அத்துடன் தமிழ் அறிஞா்கள் மற்றும் ஆய்வாளா்களுடன் கலந்துரையாடல்களும் பயிற்சி வகுப்புகளும் இடம்பெறுகின்றன. இந்த இருவார பயணத்தின் மூலம் தமிழா்களின் கலாசாரம், வரலாறு, மொழியியல் உள்பட பல்வேறு திறன்களை கற்றுணா்வா். மூன்றாவது ஆண்டாக அயலகத்தமிழா்கள் தினம் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →