பிரதமர் மோடிக்கு நன்றி: ஆளுநர் ஆர்.என்.ரவி
பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆளுநர் மாளிகை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
"தமிழக மக்கள் மீது உங்களின் அதிகப்படியான அன்புக்கும் பாசத்திற்கும், மாநிலத்தின் நலன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான உங்கள் அர்ப்பணிப்புக்கும் நன்றி.
Advertisement
Advertisement
திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார். விமானம், ரயில், சாலைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு, துறைமுகம் போன்ற பல முடிக்கப்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்களை அவர் திறந்து வைப்பார்.
தமிழ்நாட்டில் ரூ. 19,850 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தையும், கல்பாக்கத்தில் உள்ள ஐஜிசிஏஆர்-இல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட எரிபொருள் மறுசுழற்சி ஆலையையும் (டிஎஃப்ஆர்பி) அவர் திறந்து வைக்கிறார்" என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: ஆன்மிக சுற்றுலா நகரமாக உருவெடுக்கும் அயோத்தி!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.