கோப்புப்படம் 
தமிழ்நாடு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பணம் வழங்கப்படுமா? உதயநிதி பதில்! 

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பணம் வழங்கப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் உதயநிதி பதில் அளித்துள்ளார்.

DIN

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பணம் வழங்கப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் உதயநிதி பதில் அளித்துள்ளார்.

இந்தாண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை மற்றும் முழுக் கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில்,  வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஏற்பாட்டில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, "பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பணம் வழங்குவது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா போட்டி நிகழ்ச்சியின் அழைப்பிதழை வழங்க நாளை பிரதமரை சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து! -சுதர்சன் ரெட்டி

இந்தியாவுடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு: டிரம்ப்

நான் மெஸ்ஸி கிடையாது..! தங்கப்பந்து விருது வென்ற ரோட்ரி பேட்டி!

வாக்குத் திருட்டு: பிரதமர் மோடி வெளியே முகம் காட்ட தயங்கும் நிலைமை விரைவில் ஏற்படும்! -ராகுல் காந்தி

2,900 யூனிட் இ-விட்டாரா கார்களை ஏற்றுமதி செய்த மாருதி சுசுகி!

SCROLL FOR NEXT