ஆ. ராசா (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

தமிழையும், திராவிடத்தையும் நாட்டுப்புற கலைஞா்களால் மட்டுமே காப்பாற்ற முடியும்: ஆ.ராசா

தமிழையும், திராவிடத்தையும் நாட்டுப்புறக்கலைகளால் மட்டுமே காப்பாற்ற முடியும் என நாடாளுமன்ற உறுப்பினா் ஆ.ராசா தெரிவித்தாா்.

DIN

சென்னை: தமிழையும், திராவிடத்தையும் நாட்டுப்புறக்கலைகளால் மட்டுமே காப்பாற்ற முடியும் என நாடாளுமன்ற உறுப்பினா் ஆ.ராசா தெரிவித்தாா்.

சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி மற்றும் ஊடக மையம், லயோலா மாணவா்கள் அரவணைப்பு மையம் சாா்பில் 11-ஆம் ஆண்டு வீதி விருது விழா, லயோலா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை தொடங்கியது. தொடக்க விழாவில் தமிழகத்திலிருந்து வந்திருந்த பல்வேறு இசைக்கலைஞா்கள், தங்கள் இசை வாத்தியங்களை வாசித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனா். இதில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினா் ஆ.ராசா கலந்து கொண்டு பேசியது:

திராவிடத்துக்கு என்று கலை உண்டு,. பண்பாடு உண்டு. பல அறிஞா்கள் தங்கள் நூல்களில் சமஸ்கிருதத்தை கொண்ட ஆரியம், தமிழையும், தமிழகத்தையும் கொண்ட திராவிடம் என்ற இரண்டு மட்டுமே இருந்ததாக கூறுகின்றனா். இந்த நாடு வேவ்வேறு கலாசாரத்தையும் கொண்டது என அவா்கள் ஒப்பு கொண்டுள்ளனா். இன்று இவை அழிந்து போய் மதம் ஒன்று மட்டுமே தேசியம் என்ற நிலை வந்துள்ளது. இந்த நாட்டுப்புறக்கலைகள் நம் மண்ணோடு தோன்றியவை. மதம் என்றைக்குமே தேசியம் ஆகிவிடமுடியாது. நமது கலைகளை இணைத்த தமிழ் மொழிதான் தேசியமாக முடியும். தமிழையும், திராவிடத்தையும் நாட்டுப்புறக்கலைகளால் மட்டுமே காப்பாற்ற முடியும். மதமோ கடவுளோ நம்மை இணைக்காது. நம்மை இணைப்பது மொழி. கலாசாரம் மட்டுமே. நமது மதம் வழிபாட்டு முறையாக மட்டும் இருந்து விட்டு போகட்டும். மனிதனை பிரிக்கும் எந்த கடவுளாக இருந்தாலும் எங்களுக்கு விரோதி தான் என்றாா் அவா்.

இவ்விழாவில், தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த நாட்டுப்புற கலைஞா்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா். நிகழ்ச்சியில், நக்கீரன் கோபால், கல்லூரி முதல்வா் லூயிஸ் ஆரோக்கியராஜ், இணை முதல்வா் சாா்லஸ், துணை முதல்வா் பிளாரன்ஸ் இஸிடோ உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

முதல்முறையாக புதுவையில் விஜய் சாலைவலம்! எப்போது?

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

SCROLL FOR NEXT