தமிழ்நாடு

சென்னையில் விரைவில் குளிர்சாதன வசதியுடன் ரயில் சேவை

DIN


சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே பயணிக்கும் பயணிகள், விரைவில் குளிர்சாதன ரயில் சேவையை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரயில்வே வாரியமானது, இரண்டு 12 பெட்டிகளைக் கொண்ட குளிர்சாதன மின்சார ரயில்களை தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கியிருக்கிறது.

ஐசிஎஃப் தொழிற்சாலையில் இதுவரை 8 குளிர்சாதன ரயில்கள் தயாரிக்கப்பட்டள்ளன. அதில், இரண்டு குளிர்சாதன ரயில்கள் தெற்கு ரயில்வே-க்காக சிறப்பாக வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு குளிர்சாதன ரயில்களும் விரைவில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு பாதையில் இயக்கப்படும் என்று தெரிகிறது.

முதல் குளிர்சாதன ரயில் 2023 - 24ஆம் ஆண்டுக்குள் தயாரித்து வழங்கவும், இரண்டாவது அடுத்த ஆண்டு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்தப் பாதையில் குளிர்சாதன வசதி கொண்ட ரயில்களின் தேவை குறித்து மாநில அரசு நடத்திய ஆய்வுக்குப் பிறகு, குளிர்சாதன ரயில்களை இந்தப் பாதையில் இயக்குவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், இந்த குளிர்சாதன ரயில்களை முறையாக பராமரிப்பதற்கான பிரத்யேக உள்கட்டமைப்பு தாம்பரம் அல்லது ஆவடி பணிமனைகளில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் திட்டமிடப்படுள்ளது. இதுபோன்ற குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரயில்கள் மும்பையில் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT